பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்


தினத்தந்தி 6 Aug 2024 3:31 PM IST (Updated: 6 Aug 2024 4:35 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் மல்யுத்தம் - பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story