பாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறிய இந்தியா
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா - மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.
இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இத்தாலி - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.
Related Tags :
Next Story