பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து

Image Courtesy: AFP
இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஆக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஆண்கள் ஆக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு ஸ்பெயின் அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில், நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.
Related Tags :
Next Story