இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவராக அஜய் சிங் மீண்டும் தேர்வு

Image Courtesy: X (Twitter) / File Image
இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிவடைந்தது.
புதுடெல்லி,
இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிவடைந்தது. நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல், பல்வேறு மேல்முறையீடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தள்ளிக்கொண்டே போனது.
இதனால் குத்துச்சண்டை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை இடைக்கால கமிட்டி நிர்வகித்து வந்தது. இந்த நிலையில் ஏறக்குறைய 6 மாதங்களுக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் அதிக வாக்குகள் பெற்ற டெல்லியை சேர்ந்த அஜய் சிங் 40-26 என்ற கணக்கில் தன்னை எதிர்த்த சிக்கிமின் ஜஸ்லால் பிரதானை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக பிரமோத் குமார் (உத்தர பிரதேசம்), பொருளாளராக பொன் பாஸ்கரன் (தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






