உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-சவுதி அரேபியா சென்னையில் இன்று மோதல்

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-சவுதி அரேபியா சென்னையில் இன்று மோதல்
Published on

சென்னை,

20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கூடைப்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஆசிய, ஓசியானா கண்டத்தில் இருந்து கத்தாரை தவிர்த்து 7 அணிகள் தகுதி பெறும்.

ஆசிய-ஓசியானா மண்டலத்துக்கான தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் 12 அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம் பிடித்துள்ளது. சவுதி அரேபியா, லெபனான், கத்தார் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் ரியாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி 51-75 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபியாவிடம் (டி பிரிவு) தோல்வி கண்டது.

இந்த நிலையில் இந்தியா-சவுதி அரேபியா அணிகள் மீண்டும் மோதும் ஆட்டம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. பல்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உள்ளூர் சூழலை பயன்படுத்தி பதிலடி கொடுத்து வெற்றி கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com