பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி


பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி
x

கோப்புப்படம்

அனாஹத் சிங் இறுதிப்போட்டியில் ஹபிபா ஹானியுடன் மோதினார்.

சிட்னி,

பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை ஹபிபா ஹானியுடன் மோதினார்.

இதில் 4 செட்டுகள் முடிவடைந்த நிலையில் அனாஹத் சிங் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியை மேற்கொண்டு தொடர முடியவில்லை. இதன் காரணமாக எகிப்தின் ஹபிபா ஹானி சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2-வது இடம்பெற்றார்.

1 More update

Next Story