சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் எரிகைசி


சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் எரிகைசி
x

கோப்புப்படம் 

மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.

விஜ்க் ஆன் ஜீ,

டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.

13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 32-வது காய் நகர்த்தலில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவுக்கு எதிரான ஆட்டத்தில் 78-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இன்னொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வென்றார்.

1 More update

Next Story