ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்

இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் ஹயா அலியை எதிர்கொண்டார்.
Image Tweeted By @Media_SAI
Image Tweeted By @Media_SAI
Published on

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் ஹயா அலியை எதிர்கொண்டார். இதில் எகிப்து வீராங்கனை ஹயா அலி 3ஆம் நிலை வீராங்கனை ஆவார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் ஹயா அலியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றிக்கு ஜோஷ்னா சின்னப்பாவுக்கு 38 நிமிடம் தேவைப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com