ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு புதிய தலைவர் நியமனம்


ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு புதிய தலைவர் நியமனம்
x

ரந்தீர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

தஷ்கென்ட்,

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக இருந்த இந்தியாவின் ரந்தீர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார். ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்காகும்.

1 More update

Next Story