புரோ கபடி லீக் ஏலம்: முகமது ரிசாவை ரூ.2.23 கோடிக்கு வாங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ்

கோப்புப்படம்
12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
மும்பை,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று இரவு தொடங்கியது. இதில் அனுபவம் வாய்ந்த ஈரான் ஆல்-ரவுண்டர் முகமது ரிசா ஷாட் லூயி இந்த சீசனில் அதிகதொகையாக ரூ.2.23 கோடிக்கு ஏலம் போனார். கடந்த ஆண்டு அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக ஆடிய அவரை குஜராத் ஜெயன்ட்ஸ் வாங்கியது.
அவருக்கு அடுத்தபடியாக முன்னணி 'ரைடர்' தேவாங்க் தலாலை ரூ.2.20 கோடிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியும், 'ரைடர்' அஷூ மாலிக்கை ரூ.1.90 கோடிக்கு தபாங் டெல்லி அணியும், அங்கித் ஜக்லனை ரூ.1.57 கோடிக்கு பாட்னா பைரட்ஸ் அணியும் சொந்தமாக்கியது.
தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர வீரர்களான அர்ஜூன் தேஷ்வால் (ரூ.1.40 கோடி), பவன் ஷெராவத் ஆகியோரை (ரூ.59.50 லட்சம்) தன்வசப்படுத்தியது. இந்த ஏலம் இன்று தொடர்ந்து நடைபெறும்.
Related Tags :
Next Story






