புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி


புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி
x

Image Courtesy: @ProKabaddi

தினத்தந்தி 3 Oct 2025 9:30 PM IST (Updated: 3 Oct 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

சென்னை,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றது.

அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி.யோத்தஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி 43-26 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

1 More update

Next Story