புரோ கபடி லீக்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி


புரோ கபடி லீக்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி
x

image courtesy:twitter/@ProKabaddi

முன்னதாக நடந்த வெளியேற்றுதல் 2-வது சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்சை வீழ்த்தியது.

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. வழக்கமான நேரத்தில் ஆட்டம் 34-34 என்ற புள்ளி கணக்கில் சமனுக்கு வந்தது. இதையடுத்து முடிவை அறிய டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக ஆடிய டெல்லி அணி 6-4 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோற்றாலும் புனே அணிக்கு இன்னொரு வாய்ப்புண்டு.

முன்னதாக நடந்த வெளியேற்றுதல் 2-வது சுற்றில் பாட்னா பைரட்ஸ் அணி 46-37 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வெளியேற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் 3-வது சுற்றில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story