புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @ProKabaddi / @DabangDelhiKC
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
நொய்டா,
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் யு மும்பா 2வது இடத்திலும், தபாங் டெல்லி 6வது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 7வது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளன.
Related Tags :
Next Story






