புரோ கபடி லீக்: மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி


புரோ கபடி லீக்: மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி
x

image courtesy:twitter/@ProKabaddi

இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 37-37 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது.

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 98-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 37-37 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் மும்பை அணி 7-5 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான அரியானாவை வீழ்த்தி 9-வது வெற்றியை ருசித்ததுடன் 5-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

1 More update

Next Story