புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாசை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்


புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாசை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்
x

Image Courtesy: @ProKabaddi

தினத்தந்தி 17 Oct 2025 8:00 AM IST (Updated: 17 Oct 2025 8:00 AM IST)
t-max-icont-min-icon

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து முடிவை அறிய கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் பாட்னா அணி 6-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு வீரர் அலிரெஜா மிர்ஜாயன் 17 புள்ளிகள் திரட்டியும் பலன் இல்லை.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா 33-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 8-வது வெற்றியை வசப்படுத்தியது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 53-26 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.

1 More update

Next Story