தெற்காசிய தடகள போட்டி: இந்திய அணியில் 10 தமிழக வீரர்- வீராங்கனைகள்


தெற்காசிய தடகள போட்டி: இந்திய அணியில் 10 தமிழக வீரர்- வீராங்கனைகள்
x

கோப்புப்படம்

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 44 வீரர்கள், 42 வீராங்கனைகள் என 86 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களான மானவ் (110 மீட்டர் தடை ஓட்டம்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்), தினேஷ் (டிரிபிள் ஜம்ப்), தமிழ் அரசு, ஷரண் (இருவரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்), வீராங்கனைகளான ஒலிம்பா ஸ்டெபி (400 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடர் ஓட்டம்), நந்தினி (100 மீட்டர் தடை ஓட்டம்), கோபிகா (உயரம் தாண்டுதல்), பவானி யாதவ் (டிரிபிள் ஜம்ப்), சுபா தர்ஷினி (100 மீட்டர் தொடர் ஓட்டம்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

1 More update

Next Story