போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து காசோலையை இன்று வழங்கினார்.
சென்னை,
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் பிளையிங் டிஸ்க் இந்தியா மாஸ்டர்ஸ் மகளிர் அணி போர்ச்சுகலில் நடக்கவுள்ள World Beach Ultimate Challenge போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டு வீராங்கனையரின் பயணம் - தங்குமிடம் - போட்டிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.6 லட்சத்துக்கா காசோலையை இன்று வழங்கினோம். நம் வீராங்கனையர் இப்போட்டியில் சாதனைப் படைக்க வாழ்த்தினோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Related Tags :
Next Story






