உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7வது சுற்று ஆட்டத்தில் குகேஷ் - லிரென் இன்று மோதல்

Image Courtesy: AFP / Gukesh Dommaraju - Ding Liren
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்றில் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். மற்ற சுற்றுகள் டிராவில் முடிந்தது.
தற்போது இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் 7வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடனும், லிரென் கருப்பு நிற காய்களுடனும் ஆடுகின்றனர். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






