இந்தியாவில் உலகக்கோப்பை குத்துச்சண்டை இறுதிச்சுற்று


இந்தியாவில் உலகக்கோப்பை குத்துச்சண்டை இறுதிச்சுற்று
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 Oct 2025 8:45 AM IST (Updated: 17 Oct 2025 8:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் முதன்முறையாக உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் முதன்முறையாக உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று (வேர்ல்ட் பாக்ஸிங் கப் பைனல்ஸ்) அடுத்த மாதம் 14 முதல் 21 வரை கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுகிறது. உலகின் தலைசிறந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பி.எப்.ஐ) சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் 2025 சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். உலக குத்துச்சண்டை ஆண்டு தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும். இதில் 10 எடைப்பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 2024 தொடக்கப்பட்ட இந்த தொடர், இங்கிலாந்து, அமெரிக்கா, மங்கோலியாவில் நடத்தப்பட்டு இறுதிச் சுற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் வென்றது. 2025 முதல் கட்டம் பிரேஸிலிலும், இரண்டாம் கட்டம் போலந்திலும், மூன்றாம் கட்டம் கஜகஸ்தானிலும் நடைபெற்று, இறுதிச் சுற்று இந்தியாவில் நடைபெறுகிறது.

மகளிர் பிரிவில் சாக்ஷி சௌதரி, ஜாஸ்மின் லம்போரியா, நுபுர், பூஜாராணி, மினாக்ஷி ஹூடா, சஞ்சு கத்ரி, ஆடவர் பிரிவில் ஹிதேஷ், அபினாஷ், ஜுக்னு, நிகில் துபே, நரேந்தர் பெர்வால் பங்கேற்கின்றனர்.

1 More update

Next Story