தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






