சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் மாயா-ஸ்ரீவள்ளி மோதல்


சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் மாயா-ஸ்ரீவள்ளி மோதல்
x

கோப்புப்படம்

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நாளை (27-ந் தேதி) முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வீராங்கனைகள் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு), ஸ்ரீவள்ளி பாமிதிபதி (இந்தியா), தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், செயலாளர் வெங்கடசுப்பிரமணியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்படி ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெறும் வீராங்கனையை சந்திக்கிறார். வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி பாமிதிபதி, 16 வயது கோவை வீராங்கனை மாயா ரேவதியுடன் மோதுகிறார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான குரோஷியா வீராங்கனை டோனா வெகிச் தகுதி சுற்று மூலம் முன்னேறும் வீராங்கனையை எதிர்கொள்கிறார். இதன் தகுதி சுற்று ஆட்டம் 2-வது நாளாக இன்று நடக்கிறது.

1 More update

Next Story