சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் மேடிசன் கீஸ்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் மேடிசன் கீஸ்
x

கோப்புப்படம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - ஜப்பானின் அயோய் இடோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை எடுத்த மேடிசன் கீஸ் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அயோய் இடோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story