ஜோகோவிச்சின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா..?

image courtesy: AFP
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.
பெல்கிரேட்,
நான்கு வகை கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்காக செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச், முன்னாள் வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை தனது புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார். ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து அவர் பணியாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story






