ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீரர் வெற்றி

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீரர் வெற்றி
Published on

துரின்,

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. இதன்படி 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியநடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இத்தாலியின் லோரென்ஜோ முசெட்டி ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com