கத்தார் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்


கத்தார் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்
x

Image Courtesy: AFP / Iga Swiatek 

இகா ஸ்வியாடெக் (போலந்து), லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார்.

தோகா,

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலாவது அரையிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story