டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ரோகன் போபண்ணா

இவர் கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாடினார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா (வயது 45) அனைத்துவிதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அவர், 2002-ம் ஆண்டில், தன்னுடைய 22 வயதில் விளையாட தொடங்கி ஏறக்குறைய இரு தசாப்தங்களாக ஆடியுள்ளார்.

45 வயதான ரோகன் போபண்ணா கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் உடன் இணைந்து விளையாடினார். ஆனால், இந்த இணை துரதிர்ஷ்டவசமாக தொடக்கச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியது. இந்நிலையில் போபண்ணா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வுபெற்ற போபண்ணா, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்குப் பிறகு இந்தியாவிற்கான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தற்போது அனைத்து விதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com