ஆண்ட்ராய்டு வரலாறு!


ஆண்ட்ராய்டு வரலாறு!
x

ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு , நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது .

ஆண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு, அண்ட்ராய்டு 1.0 மூலம் செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.

உலகிலுள்ள 90 சதவிகித ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டு ஆளுமை செய்யத்தொடங்கி 14 ஆண்டுகளாகின்றன.

ஐ.ஓ.எஸ், சிம்பியன், பிளாக்பெரி என பல்வேறு ஓ.எஸ்.களை எப்படி ஆண்ட்ராய்டு வென்றது என்பது தெரியுமா..?

வெரிஸோன் என்ற நிறுவனமே இதற்கு காரணம். 2009-ம் ஆண்டு ஐ-போன் உலகையே மிரட்டிக்கொண்டிருக்க, அதற்கு எதிராக ஐ-போனை வெல்ல வெரிஸோன் ஆண்ட்ராய்டை ஆதரிக்கத் தொடங்கியது.

2007-ல் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஓ.எஸ் பில்டப்பில் ஆப்பிள் தன் ஐ-போனை களமிறக்கியது.

2008-ம் ஆண்டு டி-மொபைல் துணையுடன் ஆண்ட்ராய்டு ஹெச்.டி.சி. ட்ரீம் போன் மூலமாக உலகிற்கு அறிமுகமானது. 2003-ம் ஆண்டு டிஜிட்டல் கேமராக்களுக்கான மென்பொருளாக இதனை ஆன்டிரூபின் உருவாக்கினார்.

2005-ம் ஆண்டு கூகுள் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.ஸை வாங்கி ஆண்ட்ராய்டு இன்க் என பெயரிட்டது. 14 ஆண்டு மாற்றத்தின் விளைவாக இதோ உங்கள் கைகளில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்டாகி உள்ளது.


Next Story