குழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் பெண்!


குழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் பெண்!
x
தினத்தந்தி 2 April 2023 12:45 PM GMT (Updated: 2 April 2023 12:45 PM GMT)

குழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் சுபஸ்ரீ ராப்டன் மேற்கு வங்காளத்தில் உள்ள கானிங் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

அவ்வளவாக வெளிச்சத்துக்கு வராத ஒரு பெயர், சுபஸ்ரீ ராப்டன். குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகப் போராடி வரும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

சுபஸ்ரீ பள்ளியில் படிக்கும் போது தன்னார்வ அமைப்பு ஒன்று, குழந்தைகள் கடத்தல், மீட்பு பற்றிய ஒர்க் ஷாப்பை நடத்தியது. அந்த நிகழ்வு சுபஸ்ரீயை வெகுவாக பாதிக்க களத்தில் இறங்கிவிட்டார். இப்போது மேற்கு வங்காளத்தில் உள்ள கானிங் பகுதியில் பணியாற்றி வருகிறார். குழந்தைகள் கடத்தலில் மையமாக விளங்கும் ஒரு பகுதி கானிங் என்பது குறிப்பிடத்தக்கது.

''14 வயது பெண் குழந்தையைப் பாலியல் தொழிலில் அவளின் அக்காவின் கணவரே ஈடுபடுத்தியிருக்கிறார். அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அந்தப் பெண்ணை மீட்டெடுத்தது மறக்க முடியாதது...'' என்கிற சுபஸ்ரீ, மீட்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை, இருப்பிடம் போன்ற மற்ற வசதிகளையும் செய்து தருகிறார். இத்தனைக்கும் சுபஸ்ரீயின் வயது 28 தான்.


Next Story