பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி குறித்து கவலைப்படவில்லை-முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி குறித்து கவலைப்படவில்லை-முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x

பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்து கவலைப்படவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கவலைப்படவில்லை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இந்த தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா கருத்து கூறியுள்ளார். அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் தனித்து போட்டியிட்டாலும் சரி, கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் சரி, அதுபற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். மக்கள் எங்களுடன் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

கூட்டணி அமைக்கட்டும்

டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர் களிடம் பேசுகையில், "பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைக்கட்டும். ஏற்கனவே அக்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துள்ளன. அவர்களின் கட்சியை தக்கவைக்க கூட்டணி

வைத்துக் கொள்ளட்டும். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பதை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கொள்கை எப்படி ஏற்றுக்கொள்கிறது?.பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தேவேகவுடா முன்பு கூறினார். கொள்கை அடிப்படையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி அமைக்கப்பட்டது. அவர்களின் கட்சிக்கு என்ன ஆகும் என்று எனக்கு தெரியாது. இது அவா்களின் விஷயம்"என்றார்.


Next Story