பூமியின் 7 தட்டுகள்


பூமியின் 7 தட்டுகள்
x

பூமியின் மேல் பகுதி 7 பெரிய தட்டுக்களாலும், பல சிறிய தட்டுக்களாலும் ஆனது. உள்பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவாக்களால் ஆனது.

இத்தட்டுக்களின் தடிமன் ஏறத்தாழ 50 மைல் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இத்தட்டுக்களில் வட அமெரிக்க தட்டு, தென்அமெரிக்க தட்டு, ஆப்பிரிக்க தட்டு, யுரேசியன் தட்டு, பசிபிக் தட்டு, ஆஸ்திரேலிய தட்டு, அண்டார்டிகா தட்டு ஆகிய 7-ம் பெரிய தட்டுக்களாக இருக்கின்றன.

இதில் ஆஸ்திரேலிய தட்டில் நமது நாடு உள்ளது. இதில் கடலுக்கு அடியில் உள்ளதைக் கடல் தட்டு என்றும், நிலத்திற்கு அடியில் உள்ளதை கண்ட தட்டு என்றும் ஆய்வாளர்கள் வகையிட்டு உள்ளனர். இத்தட்டுக்கள் ஒன்றுக்கொன்று பல திசைகளில் ஓர் ஆண்டுக்குச் சில அங்குலங்கள் என நகர்ந்து கொண்டிருக்கின்றன. இவை நகர்வதால் ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்ளலாம். இதில் கடல் தட்டும், கண்ட தட்டும் மோதும்போது, கடல் தட்டு கீழிறங்கி கடலில் ஆழமான பள்ளம் உருவாகிறது.

கண்ட தட்டும், கண்ட தட்டும் மோதும்போது நிலம் உயர்ந்து மலைத்தொடர் உருவாகலாம். சில நேரங்களில் பூமித்தட்டுகள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்லலாம். இதனால் இடைவெளி ஏற்பட்டு சூடான, பாறைக் குழம்பு பூமிக்கு உள்ளிருந்து வெளியே வந்து குளிர்ந்து தரை போல் ஆகிவிடும். இவ்வாறாக கடல் விரிவடைவதும், கண்டங்கள் விலகுவதும் நடைபெறுகின்றன. மற்றொரு வகையில் பூமித்தட்டுகள் சமதளத்திலும் நகரலாம்.

இதனால் தட்டுகளின் முனைப்பகுதி உரசி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பூமி தட்டுக்குக் கீழே எரிமலைக் குழம்புகளில் கதிரியக்கப் பொருட்கள் அழிவினால் வெப்பம் உருவாக்கப்பட்டுப் பூமித் தட்டுகளை வெடிக்கச் செய்கிறது. இப்படிப் பிளவுகள் அதிகரித்து நிலப்பரப்பை அகற்றிப் பரப்புக்கிடையே பள்ளம் உருவாகிறது. தொடர்ந்து பிளவுறும் பகுதியில் கடல்நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


Next Story