விவசாயம் செய்வோம்!
இனியாவது நாம் அனைவரும் வேலையை செய்தாலும் அதனுடன் விவசாயமும் செய்வோம்.
காலம் மாறிபோனாலும், நாகரிகம் மாறிபோனாலும் இன்னும் மாறாமல் இருப்பது நாம் சாப்பிடும் உணவு மட்டுமே! முன்னால் காலத்தில் மக்கள் அனைவரும் விவசாயம் செய்ததால், பசி பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் இப்பொழுது மக்கள் அனைவரிடமும் செல்வம் இருக்கிறது. ஆனால் வாழ்விற்கு மிக முக்கியமான உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஏன் என்றால் மக்கள் பணம் சம்பாதித்து கஷ்டம் இல்லாமல் வசதியான வாழ்க்கையை விரும்புகின்றனர். ஆனால் யாரும் நாம் எப்படி உணவு இல்லாமல் வாழ முடியும் என்று எண்ணவில்லை. அனைவரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் பசி வரும் போது உணவையே சாப்பிடுகின்றனர். இவ்வளவு முக்கியமாக விவசாயம் இருப்பதால் தான் இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்று சொல்கிறார்கள். எனவே இனியாவது நாம் அனைவரும் வேலையை செய்தாலும் அதனுடன் விவசாயமும் செய்வோம்.
Related Tags :
Next Story