'கான்டாக்ட் லென்ஸ்' ஐடியா...!


கான்டாக்ட் லென்ஸ் ஐடியா...!
x

பாப்கார்ன் சாப்பிடும்போது அதன் பிசிறுகள் பற்களில் மாட்டிக்கொள்ள அந்தக் கணம் இவருக்கு கான்டாக்ட் லென்ஸ் ஐடியா பிறந்ததாம்.

* கொரில்லா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் முடிகளைக் கொண்ட பழங்குடிப்பெண் என்று அர்த்தம்.

* பிரபல ஓவியர் வின்சென்ட் வான்காவின் (1853-1890 ) கடைசி வார்த்தை 'La tristesse durera toujours', வாழ்நாள் முழுவதும் துயரம் நீடிக்கும் என்பதே இதன் அர்த்தம்.

* குழந்தைகள் கலைப் பொருட்களை செய்ய உதவுவது பிளே தோக் (play-doh). அமெரிக்காவின் ஓஹியோவிலுள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த பிரையன் ஜோசப் மெக்விக்கர், பில் ரோடன்பாக் ஆகிய இருவரும் இதனைக் கண்டுபிடித்தனர்.

* இடது கை பழக்கம் கொண்டவர்களின் தினமாக ஆகஸ்டு 13-ந் தேதி, 1996-ம் ஆண்டிலிருந்து உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

* கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ப் காஸ்டன் யூஜென் பிக் (1852-1937). பாப்கார்ன் சாப்பிடும்போது அதன் பிசிறுகள் பற்களில் மாட்டிக்கொள்ள அந்தக் கணம் இவருக்கு கான்டாக்ட் லென்ஸ் ஐடியா பிறந்ததாம்.


Next Story