கால்பந்து கிராமம்


கால்பந்து கிராமம்
x

கோ பன்யியின் மைந்தர்கள் தென் தாய்லாந்திலேயே சிறந்த கால்பந்து வீரர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.

தாய்லாந்தின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது கோ பன்யி கிராமம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தோனேஷியாவிலிருந்து தாய்லாந்திற்குப் பிழைக்க வந்த இஸ்லாமிய மீனவர்களால் உருவாக்கப்பட்டது இக்கிராமம். அந்தமான் கடலின் மேற்பரப்பில் வீடுகள் அமைந்திருப்பதால் கோ பன்யியை 'மிதக்கும் கிராமம்' என்று அழைக்கிறார்கள்.

கடலின் அடிப்பகுதியிலிருந்து மேற்பரப்பு வரை வலிமையான கம்புகளை அஸ்திவார தூண்கள் போல அமைத்து வீட்டைக் கட்டியிருக்கின்றனர். இந்த வீடுகளில் 360 குடும்பங்கள் வசிக்கின்றன.

1986-ம் வருடம் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கோ பன்யி சிறுவர்கள் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. மீன் பிடிக்கப் பயன்படுத்திய பழைய படகுகள், மரங்களைக் கொண்டு மிதக்கும் கால்பந்து மைதானத்தை உருவாக்கி அதில் விளையாட ஆரம்பித்தனர்.

கோ பன்யியைச் சுற்றி நடக்கும் கால்பந்து போட்டிகளில் எல்லாம் இந்தச் சிறுவர்கள்தான் சாம்பியன். இன்று கோ பன்யியின் மைந்தர்கள் தென் தாய்லாந்திலேயே சிறந்த கால்பந்து வீரர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.


Next Story