நாட்டு கொடி நிறங்களின் வரலாறு!


நாட்டு கொடி நிறங்களின் வரலாறு!
x

இந்தியா உட்பட சில நாட்டு கொடிகளில் இடம்பிடித்திருக்கும் நிறங்களின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.

* இந்தியா

காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது. வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம் வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

* நெதர்லாந்து

1937-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்நாட்டின் கொடி அங்கீகரிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறம் மன்னர் வில்லியமை குறிப்பது. ஆனால் வெயில் பட்டு ஆரஞ்சு சிவப்பானதால், கொடியிலிருந்த ஆரஞ்சு, பின்னர் சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது.

* பெல்ஜியம்

1831-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி ஏற்கப்பட்ட இந்நாட்டின் கொடியிலுள்ள மஞ்சள் சிங்கத்தையும், சிவப்பு சிங்கத்தின் நகம், நாக்கையும், கருப்பு கவசத்தையும் குறிக்கிறது. மேலிருந்து கீழான டிசைன் பிரெஞ்சு கொடியிலிருந்து 'ரீமேக்'கானது.

* அயர்லாந்து

கொடியினுள்ளவை அனைத்தும் மதங்கள்தான். பச்சை கத்தோலிக்கையும், ஆரஞ்சு புரோடெஸ்டன்டையும் குறிக்கிறது. வெள்ளை இவ்விரு மதங்களும் ஒற்றுமையாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

* இத்தாலி

1919-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இக்கொடியின் டிசைனர் மன்னர் நெப்போலியன். நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாது. பச்சை நெப்போலியனுக்கு பேவரிட் நிறம், எனவே அந்நிறத்திற்கு தேசிய கொடியில் இடம் கிடைத்தது.


Next Story