காடுகளை காக்கும் காவலன்


காடுகளை காக்கும் காவலன்
x

சிங்கம் காட்டிற்கு ராஜா என்று அழைக்கப்பட்டாலும், அந்த காடுகளை காக்கும் காவலன் என போற்றப்படும் விலங்கு புலி.

புலிகளின் பாதுகாப்பின் அவசியத்தைப்பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், புலிகளின் இயற்கை வாழ்விடத்தைப்பாதுகாப்பதை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலக புலிகள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

காடுகளின் பாதுகாவலன் புலி என்று அழைக்கப்படுவதுண்டு. காட்டில் இருக்கும் அந்த உயிர்சுழற்சியின் சமநிலைக்கு புலிகள் மிக அவசியம். ஆனால் பல ஆண்டுகளாகவே புலிகள் அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன. வேட்டைக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் புலிகள் கொல்லப்பட்டதன் விளைவு தற்போது உலகம் முழுவதுமே 3900 புலிகள்தான் வாழ்ந்து வருகின்றன.

1 More update

Next Story