கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
x

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை அவர் எழுதி புகழ் பெற்றார்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் கிராமத்தில் சிவதாணு -ஆதிலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நாஞ்சில் நாட்டு கவிஞரான இவர், அழகம்மை ஆசிரிய விருத்தம் என்ற நூலை இயற்றினார். மேலும், காந்தளூர் சாலை, மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை அவர் எழுதி புகழ் பெற்றார்.

எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆப் ஆசியா என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார். பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

இனிய தமிழில் எவரும் விளங்க பாடல் இயற்றும் திறன் மிக்கவர். அவரின் புகழ்பெற்ற கவிதைகளில்,

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு....

போன்ற பாடல்கள் என்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவர் கடந்த 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தன் இன்னுயிர் நீத்தார். நாளை அவரது நினைவு நாள் வரும் வேளையில் அவரது நினைவை போற்றுவோம்.


Next Story