இயற்கையை நேசிப்போம்


இயற்கையை நேசிப்போம்
x

இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும்படியாகவே மனிதன் படைக்கப்படுகிறான்.

இந்த பூலோகமானது பறந்து விரிந்த நிலப்பரப்புகளையும், காடுகளையும், நீர்வீழ்ச்சிகளையும், ஆறுகளையும் வளங்களாக கொண்டுள்ளது. இந்த இயற்கையானது செழித்து வளராவிட்டால் மனித இனம் அழிந்துவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றவை பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைகின்றது. காடுகள்அழிக்கப்படுகின்றன.கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இவ்வாறு இயற்கை கொடுத்த கொடைகள் மனித செயல்பாடுகளால் அழிந்து வருகின்றன. இயற்கையானது மனித செயல்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது,

இயற்கையாகவே நிகழும் நிகழ்வுகளாலும் அழிவிற்குள்ளாகிறது. உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம். இயற்கையை பாதுகாப்பது தனி மனிதர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். மரங்கள் வெட்டுவதை தவிர்த்து, இயன்ற அளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்ற வேண்டும். இயற்கைச் சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான். இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.எனவே இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து, நாமும் நலம் பெற்று வாழ்வோம்.


Next Story