கொடிய விஷம் கொண்ட விலங்கினங்கள்


கொடிய விஷம் கொண்ட விலங்கினங்கள்
x

வித்தியாசமான முறைகளால் உயிர்களை கொல்லக்கூடிய விஷம் படைத்த விலங்குகள் பல உள்ளன. அவற்றில் சில விலங்குகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

நாம் வாழும் இந்த உலகில் நம்மை விட வித்தியாசமான, நம் அறிவுக்கு எட்டாத பயங்கரமான விலங்குகள் வாழ்கின்றன. வெறுமனே நகத்தையும், பல்லையும் கொண்டு தாக்கும் விலங்குகளை விட வேறு சில வித்தியாசமான முறைகளால் உயிர்களை கொல்லக்கூடிய விஷம் படைத்த விலங்குகள் பல உள்ளன. அவற்றில் சில விலங்குகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

ஜெல்லி மீன்

இந்த ஜெல்லி மீன் மனிதர்களின் இதயம், நரம்பு பகுதியை தாக்கும். அதன் தாக்குதல் உச்சக்கட்ட வலியை கொடுத்து தண்ணீரில் இருந்து நாம் கரையை அடையும் முன்னரே நம்மை மூழ்கடித்து அல்லது இதயத்தை நிறுத்தி கொன்று விடும்.

ராஜ நாகம்

உலகின் மிக நீளமாக வளரக்கூடிய விஷ பாம்பினம் ராஜநாகம்தான். இது பாம்புண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனைய சிறிய பாம்புகளை இது சாப்பிடும். இந்த வகை நாகத்தின் ஒரு கடி ஒரு மனிதனை 15 நிமிடத்தில் கொல்லக்கூடியது. மென்மையான இடங்களில் கடித்தால் நன்கு வளர்ந்த ஆசிய யானையை கூட 3 மணி நேரத்தில் கொன்றுவிடுமாம்.

கூம்பு நத்தை

பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கக்கூடியது கூம்பு நத்தை. ஆனால் மிகவும் கொடூரமானது இந்த நத்தையின் ஒரு சொட்டு விஷம் 20 மனிதர்களை கொன்றுவிடுமாம். இந்த வகை நத்தை வெதுவெதுப்பான உப்பு நீர் பிரதேசங்களில் வாழும். இவை கடித்தால் மூச்சு கோளாறு, பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.

நீல வளைய ஆக்டோபஸ்

இந்த வகை ஆக்டோபஸ் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இதன் விஷத்தன்மை 26 மனிதர்களை கொல்லகூடிய அளவு பயங்கரமானது. இவை கடித்தால் பெரிய அளவில் வலி இருக்காதாம். ஆனால் அவை கடித்ததற்கு மருந்தே இல்லையாம். அவை கடித்தால் தசை செயலிழப்பு, சுவாச கோளாறை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும்.

கல் மீன்

கல் மீன் என்ற வகை மீனானது உலகின் மிக பயங்கரமான மீன் அல்லது விஷமிக்க மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மீனின் முதுகு பகுதியில் 2 விஷ பைகளுடன் இணைக்கப்பட்ட 13 முள்ளந்தண்டெலும்புகள் நீட்டி கொண்டு இருக்கும். இவற்றின் விஷம் உடலில் இறங்கும் அளவை பொறுத்து தசை செயலிழப்பு, முடக்குவாதம் உள்ளிட்டவை ஏற்படுமாம். மேலும், இந்த வகை மீனை ஒருவர் தெரியாமல் மிதித்து விட்டால் மிதித்தவரின் காலை வெட்டிதான் எடுக்க முடியுமாம்.


Next Story