மேகங்களும்... வகைகளும்...
மேகங்கள் அதன் உயரத்தைப் பொறுத்து 3 வகையாக பிரிக்கப்படுகின்றன. அவை, கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள் ஆகியவையாகும். இவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கீழ்மட்ட மேகங்கள்: 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் மேகங்கள் இவை. இவற்றை கீற்று மேகங்கள் என்று அழைப்பார்கள். இதற்கு 'குமலஸ்' என்ற பெயரும் உண்டு. இந்த வகையான மேகங்கள் ஒரு போதும் மழையைத் தராது.
இடைமட்ட மேகங்கள்: கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரம் வரை இருக்கும். இந்த மேகத்தை 'படை மேகங்கள்' அல்லது 'தாழ் மேகங்கள்' என்று அழைப்பார்கள். இது ஆங்கிலத்தில் 'ஸ்ரேடஸ்' என்றும் அழைக்கப்படும். இந்த மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படும்.
உயர்மட்ட மேகங்கள்: கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் மீட்டர் வரை இருக்கும். வெடித்த பருத்தி போன்ற வடிவமைப்பில் காணப்படும். அணி அணியாக இந்த மேகங்கள் தென்படும். இவை 'திரள் மேகங்கள்' என்றும், 'சிரஸ்' என்றும் அழைக்கப்படும். மின்னல், இடி, மழையைக் கொடுக்கும் மேகங்கள் இவைதான்.
செங்குத்து மேகங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. இதனை 'கார்படை மேகங்கள்' என்பார்கள். இது கருமை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். 'நிம்ப்ஸ்' என்றும் அழைக்கப்படும். இந்த வகை மேகங்கள்தான், ஆலங்கட்டி மழை பெய்யக் காரணமாக இருக்கின்றன.