உளுந்தங்கஞ்சியின் மகத்துவம்...!


உளுந்தங்கஞ்சியின் மகத்துவம்...!
x

உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர் உளுந்தங்கஞ்சியை வைத்திருந்தார்கள்.

தாய்மை புனிதமானது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே கர்ப்பப்பையின் உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்கு சிறந்ததாக டாக்டர்கள் கூறுகிறார்கள்

ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் எனக் குறிப்பிடும் வளர்ச்சி முக்கியமானது. இதற்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.

உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர் உளுந்தங்கஞ்சியை வைத்திருந்தார்கள்.

நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கர்ப்பப்பைைய வலுப்படுத்தும். சமச்சீரான உணவை நேசியுங்கள். குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும். எளிய யோகா பயிற்சிகளும் செய்யலாம். இது, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் சதாவேரி லேகியம், ஆல விதைப் பொடியுடன் அயச்செந்தூரம் போன்றவற்றை தேனில் கலந்து உண்ணலாம். மூசாம்பர மெழுகு உள்ளிட்ட மருந்துகளும் உள்ளன. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்துகளை உண்ண வேண்டும். இலந்தை இலையை சுத்தம் செய்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். 5 பூண்டு, 3 மிளகு ஆகியவற்றை நீர்விட்டு அரைத்து மோரில் கலந்து குடிப்பது நல்லது.

மாதவிடாய் நாட்களில் இரு வேளை பெண்கள் பருகலாம் எனவும் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.


Next Story