'பிளாக் டீ' பருகலாமா?


பிளாக் டீ பருகலாமா?
x

உணவு உட்கொண்ட பிறகு ‘பிளாக் டீ’ எனப்படும் கருப்பு தேநீரை நிறைய பேர் பருகுகிறார்கள். சாப்பிட்ட பிறகு பிளாக் டீ பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப் படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கருப்பு தேநீரை உட்கொண்டதன் மூலம் அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

பிளாக் டீ, கிரீன் டீ போன்ற தேயிலைகளில் பாலிபினால்கள் உள்ளன. இவை இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கல் படிவதை தடுப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, எலும்புகளை வலிமைப்படுத்துவது, நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, உடல் எடையை குறைப்பது, செரிமானம் சீராக நடைபெற ஊக்குவிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது உள்பட ஏராளமான நன்மைகளை பிளாக் டீ பருகுவதன் மூலம் பெறலாம்.


Next Story