சிறுவர்களுக்கான வயர்லெஸ் ஹெட்போன்


சிறுவர்களுக்கான வயர்லெஸ் ஹெட்போன்
x

பெல்கின் நிறுவனம் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சவுண்ட்பார்ம் என்ற பெயரில் வந்துள்ள இந்த மினி இயர்போன் சிறுவர்களுக்காக அட்ஜெஸ்ட் செய்யும் வகை யில் மிருதுவான தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மொபைல்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றுடன் இதை இணைத்துப் பயன்படுத்த முடியும். ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க வசதியாக நீண்ட நேரம் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒலி அளவும் அதிகரிக்காத வகையில் ஒரே சீரானதாக இருக்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதியுடன், 10 மீட்டர் தூரம் வரை இது செயல்படும். உள்ளீடாக மைக்ரோபோன் உள்ளது. கீழே விழுந்தாலும் உடையாத வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.

குழந்தைகளைக் கவரும் வகையில் நீலம், இளம் சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,999.


Next Story