பிராவியா எக்ஸ்.ஆர்.


பிராவியா எக்ஸ்.ஆர்.
x

சோனி நிறுவனத் தயாரிப்புகளில் பிராவியா மாடல் ஸ்மார்ட் டி.வி.க்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பிராவியா மாடலில் தற்போது எக்ஸ்.ஆர். எனும் மாடல் ஓலெட் திரையைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 55 அங்குலம், 65 அங்குலம் அளவுகளில் கிடைக்கிறது.

4-கே ரெசல்யூஷனில் காட்சிகள் துல்லியமாக நிறம் மாறாமல் தெரியும். வீடியோகேம் பிரியர்களுக்கும் இது ஏற்றது. கூகுள் டி.வி. ஒருங்கிணைப்பு மற்றும் குரல் வழிக் கட்டுப்பாட்டு வசதி, ஆப்பிள் ஹோம் கிட், ஏர் பிளே உள்ளிட்ட வசதிகள் கொண்டது.

இனிய இசையை வழங்க டால்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 55 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.3,39,990. 65 அங்குலம் டி.வி. விலை சுமார் ரூ.4,19,990.


Next Story