எலிஸ்டா ஏர் கூலர்
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் ஏர் கூலரை எலிஸ்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
90 லிட்டர் திறன் கொண்டதாக டெசர்ட் ஸ்னோ மாங்க் மற்றும் டெசர்ட் அரோரா கூல் என்ற பெயர்களில் இரண்டு மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 35 அடி தூரத்துக்கு குளிர்ச்சியான காற்றை வீசும் திறன் கொண்டதாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள 100 வாட் மோட்டார் 1,350 ஆர்.பி.எம். சுழற்சியில் குளிர்ச்சியான காற்று அறை முழுவதும் பரவ உதவுகிறது. தேன் அடை வடிவிலான குளிர்ச்சி பேட் இதற்கு உதவியாக உள்ளது. இதன் மேல் பாகம் உறுதியான கண்ணாடியால் ஆனது. கொசு மற்றும் தூசு அடையாத வகையிலான வடிகட்டி உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு குறைந்த மின்சாரத்தில் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
வெள்ளை, கிரே நிறத்தில் வந்துள்ளது. இவற்றின் விலை சுமார் ரூ.7,899 முதல் ஆரம்பமாகிறது.
Related Tags :
Next Story