ஹெயர் கினோச்சி ஏர் கண்டிஷனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹெயர் நிறுவனம் 5 நட்சத்திர குறியீடு பெற்ற கினோச்சி ஹெவி டூட்டி புரோ ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.
இது அறையில் குளிர்ச்சித் தன்மையை மற்ற கண்டிஷனர்களை விட 20 மடங்கு வேகமாக அளிக்கும். இதில் மூன்று இன்வெர்டர் பிளஸ் தொழில்நுட்பம் உள்ளதால் மின்சாரத்தை அதிக அளவு சேமிக்க உதவும். 10 விநாடிகளில் குளிர்ச்சியை அறையில் பரவச் செய்யும். ஏர்கண்டிஷனரின் உள்பகுதியில் ஐஸ் உறைவதைத் தவிர்க்கும் வசதியும், செல்ப் கிளீன் எனப்படும் தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் நுட்பமும் இடம் பெற்றுள்ளது.
இதில் இருமுறை அயனி சுத்தமாக்கும் தொழில் நுட்பம் உள்ளதால் பாக்டீரியா போன்ற கிருமிகள் வெளியேறாது, அவை காற்றாடியில் ஒட்டிக் கொண்டிருப்பதும் தவிர்க்கப்படும். இதன் விலை சுமார் ரூ.47,990 முதல் ஆரம்பமாகிறது.
Related Tags :
Next Story