இன்றைய ராசிபலன் - 05.07.2024


இன்றைய ராசிபலன் - 05.07.2024
x
தினத்தந்தி 5 July 2024 8:42 AM IST (Updated: 5 July 2024 10:17 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை.

நட்சத்திரம்: இன்று அதிகாலை 5.11 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி: இன்று அதிகாலை 5.08 வரை அமாவாசை பின்பு பிரதமை .

யோகம்:சித்தயோகம். மேல்நோக்குநாள்.

நல்ல நேரம் காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45

ராகுகாலம் காலை: 10.30-12.00

எமகண்டம் மாலை: 3.00-4.30

சந்திராஷ்டமம்: விருச்சிகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்துதவுவர். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.

ரிஷபம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள், எதிர்காலம் இனிமையாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

மிதுனம்

புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்துவீர்கள். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

சிம்மம்

யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர், பொன், பொருள் வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறலாம்.

கன்னி

நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவப் பதவிகள் வரலாம். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறு வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

துலாம்

பிரபலமானவர்களால் பிரச்சினைகள் தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்கள்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்ததைச் செய்ய தாமதம் ஏற்படும். பணத்தேவைகள் அதிகரிக்கும். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.

தனுசு

மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது. உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

மகரம்

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்துசேரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

கும்பம்

காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

மீனம்

பொறுமையைக் கடைப்பிடித்துப் பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாளும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

1 More update

Next Story