இன்றைய ராசிபலன் - 22.07.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி வருடம் ஆனி மாதம் 6ம் தேதி திங்கட்கிழமை
நட்சத்திரம்: இன்று அதிகாலை 2.07 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
திதி: இன்று பிற்பகல் 3.11 வரை பிரதமை பின்பு துவிதியை
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 6.15 - 7.15
நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45
ராகு காலம் காலை: 7.30 - 9.00
எமகண்டம் காலை: 10.30 - 12.00
குளிகை மாலை: 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம் காலை: 9.15 - 10.15
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டம்: ரோகினி, மிருகசீரிடம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
பிரிந்திருந்த தம்பதிகள் சமாதானபடுத்தி ஒன்று சேரும் காலமிது. தாய்மாமன் வழி உறவினர்கள் தங்களிடம் நட்பு பாராட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். பயணத்தின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
இன்று ரோகினி, மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்
மிதுனம்
உங்களது புதிய முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கடகம்
பீசா, பர்கர் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு சமையற்கலையில் ஆர்வம் கூடும். புதியதொரு உணவினை செய்து பார்ப்பீர்கள். எதிர்ப்பார்த்த ஒரு தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். ஆசிரியரிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
சொகுசு வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.
வீடு கட்ட தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற எதிர்பார்த்த பணம் வரும். திருமணமாகாதவருக்கு நல்லதொரு துணை அமையும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
உத்யோகத்தில் நிர்வாகத்திறன் வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல புரிதலுடன் கூடிய துணை கிடைக்கும். வியாபாரிகள் கிளைகளை துவங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
துலாம்
வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருள் வாங்குவீர்கள். மகான்கள், சித்தர்களின் பீடத்திற்கு சென்று வருவீர்கள்.. உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மேற்படிப்புக்குண்டான விண்ணப்பங்கள் செய்வீர்கள். தம்பதிகள் வெளியிடங்களான மால் திரைப்படங்களுக்குச் சென்று வருவர்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
விருச்சிகம்
பொறியார்களின் புதிய ப்ராஜக்டிட்கான கட்டிட வரைபடமும் ஒப்புதலாகும். மார்கெட்டிங் பிரிவினர் தங்கள் சாமர்த்தியமான பேச்சால் அதிக ஆர்டர்களை குவிப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெண்களுக்கு கை, கால் வலி வந்து நீங்கும். நீண்ட நேரம் நீரில் நிற்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
கூட்டு தொழிலாளர்கள் தாங்கள் நினைத்ததற்கு மேலாக நல்ல லாபத்தினை பெறுவீரகள். தம்பதிகளிடையே அன்பு பெருகும். நீண்ட நாட்களாக வரண் தேடுபவருக்கு திருமணம் கைகூடி வரும். வயிறு பிரச்சினை வரும், வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம். இல்லையென்றால் முக்கிய விசயத்தில் கோட்டை விடுவீர்கள்.ஆதலால், விழிப்புடன் இருத்தல் நலம். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் பலமுறை படித்தால்தான் நினைவுத்திறன் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
கும்பம்
புதிய தொழில் துவங்க நெடுநாட்களாக முயச்சித்த லைசன்ஸ் கிடைத்து கிடைத்துவிடும். சகோதரருக்கான சுபகாரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண்விழிப்பதை நிறுத்திக்கொள்வது தங்கள் உடல்நிலைக்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
குடும்பத் தலைவிகள் குடும்பத்திலுள்ள பணப்பற்றாக்குறை எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். திருமணமானவர்களுக்கு தம்பதிகளிடையே புரிதல் கிடைக்கும். இடம் மனை போன்றவைகளில் முதலீட்டினை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு