ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைப்பு


ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைப்பு
x

கோப்புப்படம்

ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில், ஜனாதிபதி அலுவலக செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.90 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், ஒதுக்கப்பட்ட ரூ.84 கோடியே 80 லட்சத்துடன் ஒப்பிடுகையில், இது ரூ.5 கோடியே 34 லட்சம் அதிகம்.

ஜனாதிபதியின் சம்பளம் மற்றும் இதர படிகளுக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு ரூ.53 கோடியே 32 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகைைய விட ரூ.15 கோடி அதிகம்.

அதே சமயத்தில், ஊழியர்கள் சம்பளம் உள்பட ஜனாதிபதி வீட்டு செலவுகளுக்கு ரூ.36 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், ரூ.46 கோடியே 27 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரூ.10 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 27 சதவீத தொகை துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story