புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்


புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்
x

புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் இது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

* மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்.

* அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

* விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

* பட்ஜெட்டில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டம் இடம்பெற்றுள்ளது.

* மகளிர், குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

* பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் சுயமுன்னேற்றம் அடைய வகை செய்யப்பட்டுள்ளது.

* முதல் முறையாக 'விஸ்வகர்மா' பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்பான திட்டம் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

* பட்ஜெட்டில் தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்.

* நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நமது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* நாங்கள் வரி விகிதத்தை குறைத்து அதற்கேற்ப நிவாரணம் வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story