இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
x

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. நடப்பு மாதம் நாடு முழுவதும் மழை இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:-

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் 109 சதவீதம், அதாவது 167.9 மி.மீ. நீண்டகால சராசரி மழையளவு இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. உத்தரகாண்ட், இமாசல பிரதேசத்தின் சில பகுதிகள், காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய மத்திய பிரதேச பகுதிகள் அடங்கிய வடமேற்கு பிராந்தியத்தை பொறுத்தவரை கனமழை முதல் அதிகனமழை வரை எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரின் ஒவ்வொரு வாரத்திலும் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த நிகழ்வுகளை எதிர்பார்க்கிறோம். இது நாடு முழுவதும் கணிசமான மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும்.இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

Next Story